சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்
சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் இளைய தளபதி விஜய்.
ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்குப் பிறகு அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என கடந்த வாரம் முழுக்க செய்திகள் ரவுண்டு கட்டி அடித்தன.
ஆனால், தற்போது திடீரென விஜய் படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் இயக்குனர் சிம்புதேவனுக்கு அடித்திருக்கிறது.
விஜய்யின் நீண்டநாள் மேனேஜரும், பி.ஆர்.ஓ.வுமான பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் படத்தையே சிம்புதேவன் இயக்க இருக்கிறார்.
இதற்காக சிம்புதேவன் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தை சிம்புதேவன் இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் விஜய் - சிம்புதேவன் பட வேலைகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment