ஒரு பக்கம் கேன்சர் சிகிச்சை, மறுபக்கம் கேமரா முன் நடிப்பு : மம்தா

No comments
ஒரு பக்கம் கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெறும் மம்தா மோகன்தாஸ் மறுபக்கம் நடிப்பும் தொடர்கிறார். சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். இவர் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

 இதற்காக அவர் கடந்த ஆண்டு கீமோதெரப்பி சிகிச்சை பெற்றார். இதற்காக தலைமுடியை மொட்டை அடித்தார். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த மம்தா பொருத்தமான விக் வைத்து நடித்தார். இதற்கிடையில் அவருக்கும் பஹ¢ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடமே நீடித்த திருமண வாழ்க்கை பின்னர் விவாகரத்தில் முடிந்தது. 

 மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார் மம்தா. செல்லுலாயிட், லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன், முசாபிர், பய்ஸா பய்ஸா ஆகிய மலையாள படங்களில் கடந்த ஆண்டு நடித்தார். மீண்டும் அவருக்கு கேன்சர் நோய் தாக்கியதை அடுத்து சிகிச்சை பெறுவதற்காக நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்தார். சிகிச்சை முடிந்தகையோடு மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

டு நூரா வித் லவ் என்ற மலையாள படத்தில் அவர் நடிக்கிறார். கேன்சர் ஒருபக்கம் வாட்டினாலும் அதுபற்றி கவலைப்படாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

No comments :

Post a Comment