கடவுள் வேடத்தை விக்ரம் ஏற்பாரா?

No comments
டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஏற்க விக்ரமிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் சோலோ ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ். மகேஷ்பாபு, ராம் சரண் தேஜா போன்ற இளம் ஹீரோக்களின் மவுசால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே சிட்டு என்ற படத்தில் மகேஷ்பாபுவுக்கு அண்ணனாக நடித்தார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். 

ஆனால் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்துவிட்டனர். கடைசியில் அங்காடி தெரு அஞ்சலி ஜோடியாக நடித்தார். இப்படம் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோவாக ஷேடோ, மசாலா என 2 படங்களில் வெங்கடேஷ் நடித்தார். அப்படங்கள் தோல்வி அடைந்தது. தற்போது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஓ மை காட் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் வெங்கடேஷ். 

இப்படத்தில் தனது நெருங்கிய நண்பரான விக்ரமை நடிக்க கேட்டிருக்கிறார் வெஙகடேஷ். பாலிவுட்டில் ஹிட்டான ஓ மை காட் படத்தில் அக்ஷய் குமார் கிருஷ்ணர் வேடம் ஏற்று நடித்திருந்தார். அதேபோல் கடவுள் வேடத்தில் விக்ரமை நடிக்க கேட்டிருக்கிறார். அவர் கால்ஷீட் தந்தால் இப்படத்தை தமிழ், தெலுங்கு இருமொழியிலும் தயாரிக்க உள்ளார்.

 இந்தியில் பரேஷ் ராவல் நடித்த வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். இதே படத்தைதான் தமிழில் ரஜினி நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்க இருந்தார். ரஜினி மறுத்ததால் ஐஸ்வர்யா இப்படத்தை கைவிட்டார்.

No comments :

Post a Comment