தோல்வி படத்தில் நடித்த ஹீரோயினுக்கு 2 படம் ஒப்பந்தம்

No comments
தோல்வி படத்தில் நடித்த கோமல்ஜாவை ஒரே இயக்குனர் 2 படங்களில் ஒப்பந்தம் செய்திருக்கிறார். பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர் கோமல் ஜா. டோலிவுட்டில் வருண் சந்தேஷ் நடித்த பிரியதம நீவச்சாடா குஷலம்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

 அப்படம் ரிலீஸ் ஆகி தோல்வி அடைந்தது. இந்த ஆண்டாவது திரையுலகம் தனக்கு கைகொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் கோமல். இந்நிலையில் தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் பில்லா-ரங்கா என்ற படத்தில் பிரதீப் ரயான் ஜோடியாக நடிக்கிறார்.

 இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மைனே பியார் கியா என்ற மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதுபற்றி கோமல் கூறும்போது, பில்லா ரங்கா பட ஷூட்டிங் பாதி முடிந்த நிலையில் இயக்குனர் தனது அடுத்து படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாரித்திருந்தார். 

முப்பரிமாண காதல் கதையான இதிலும் என்னை நடிக்க கேட்டார். உடனே ஒப்புக்கொண்டேன். அதன் படப்பிடிப்பும் வேகமாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது. இதில் கொடூரமான பெண்ணாக நடிக்கிறேன் என்றார்.

No comments :

Post a Comment