பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா?
பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினியை நடிக்க கேட்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அதற்காக பரபரப்பான ஸ்கிரிப்ட் ரெடியாகிறது. ரஜினி நடித்து சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படம் அந்த காலகட்டத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற சூழலையும் ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த பேச்சு அடங்கிப்போனது.
ஆனாலும் பாட்ஷா படம் ரசிகர்கள் மனதில் இன்னும் பரபரப்பாக பேசப்படும் படமாகவே இடம்பிடித்திருக்கிறது. இந்நிலையில் பாட்ஷாவின் 2ம் பாகத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
சமீபத்தில் ரஜினியை சந்தித்த சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா 2ம் பாகம் படத்தை உருவாக்குவதுபற்றி ஆலோசித்தார். ஆனால் அதற்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாட்ஷா 2, உருவானால் அது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிடும். அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் அமையாமல்போனால் பாட்ஷா முதல் பாகத்திற்குள்ள பாப்புலாரிட்டியும் குறைந்துவிடும். இதுபற்றி யோசித்துவிட்டு சொல்வதாக ரஜினி கூறியதாக தெரிகிறது.
ரஜினியின் பதில் எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.
ஏற்கனவே சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தை உருவாக்குவதற்கான ஸ்கிரிப்ட்டை இயக்குனர் பி.வாசு ரெடியாக வைத்திருக்கிறார். ஆனால் அதில் நடிப்பது பற்றியும் ரஜினி இதுவரை முடிவு எடுக்கவில்லை. ரஜினி நடித்தால் தான் சந்திரமுகி 2ம் பாகம் இயக்குவேன் என்று வாசுவும் உறுதியாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment