மாற்றுமொழி மார்க்கெட் பிடிக்க ஹீரோக்கள் கடும் போட்டி

No comments
அஜீத், விஜய் நடித்த படங்கள் கேரளாவில் வெளியாகி வசூல் அள்ளுகிறது. சமீபத்தில் வெளியான ஜில்லா, வீரம் போன்ற படங்களால் மல்லுவுட் படங்களின் ரிலீஸ் கேரளாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கெட் மீது சக ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரும் குறி வைத்துள்ளனர். 

அவர்களும் தங்கள் பட புரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா சென்று பங்கேற்கின்றனர். சிங்கம் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஆந்திரா, கேரளா, சென்றார் சூர்யா. அதேபோல் பிரியாணி படத்துக்காக கார்த்தி, பாண்டியநாடு படத்துக்காக விஷாலும் ஆந்திரா, கேரளா சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இதனால் பாதிக்கபட்டிருக்கும் மல்லுவுட் ஹீரோக்கள் தங்களின் பார்வையை கோலிவுட் மார்க்கெட் மீது திருப்பி இருக்கின்றனர். 

தாங்கள் நடிக்கும் மலையாள படங்களில் தமிழ் ஹீரோக்களை புக் செய்யத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான்,  சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற டாப் ஸ்டார்கள் கோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்ற தமிழ் நாட்டுக்கு விசிட் அடித்து பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மார்க்கெட்டுக்குள் என்டர் ஆகும் எண்ணத்தில் சூர்யா தான் நடித்த சிங்கம் 2 இந்தியில் டப்பிங் செய்துவெளியிட்டார். 

நடிகர் தனுஷ் நேரடி இந்தி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பாலிவுட் ஹீரோக்களில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். ஆமிர்கான், ஹிருத்திக் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் படங்களும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த போட்டியால் இந்தியா முழுவதும் சினிமா மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

No comments :

Post a Comment