ஒரே படத்தில் 3 நிஜ சம்பவம்

No comments
3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது கற்பவை கற்றபின். இதுபற்றி இயக்குனர் பட்ராம் செந்தில் கூறியதாவது: ஈழ தமிழர்கள் பிரச்னைக்காக உயிர் தியாகம் செய்த இளைஞர், தகாத உறவால் அவமானத்தில் தற்கொலை செய்யும் ஜோடி, கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் பெண் என 3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.

 தற்கொலை செய்யக்கூடாது என்று அட்வைஸ் சொல்லும் ஸ்கிரிப்ட்டாக இல்லாமல் தற்கொலை செய்பவர்கள் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்ற மாறுபட்ட கோணத்தில் இதன் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

 சந்தீப்-தருணா, மது - அபினிதா ஆகிய 2 ஜோடிகளுடன் சிந்துகுமாரி மற்றும் சிங்கம்புலி, விசித்ரன், அம்மு, யுவான் சுவாங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு. இந்திரவர்மன் இசை. கார்த்திகேயன், செந்தில் தயாரிப்பு. ஊட்டி, திருச்சி மற்றும் ஆந்திராவில் ஷூட்டிங் நடந்துள்ளது.

No comments :

Post a Comment