என்னை பிரபலமாக்கிய பாடல்: ரம்யா நம்பீசன்
பாண்டிய நாடு படத்தின் ‘கலாய்சி பை’ பாடலால் பிரபலமாகிவிட்டேன் என்று கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்.
கேரளத்து வரவான ரம்யா நம்பீசன், ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன், பீட்சா போன்ற படங்களில் நடித்தார், இதில் பீட்சா படத்தின் மூலம் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்.
மேலும் இவரிடம் நடிப்புத்திறமை மட்டுமல்லாமல் பாடும் திறமையும் உள்ளது, மலையாளத்தில் பல பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் பாண்டிய நாடு பாடத்தில் ‘கலாய்சி பை’ என்ற பாடலின் மூலம் பாடகியாக அவதாரம் எடுத்தார்.
இந்தப்பாடலால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்துள்ளன, இதுகுறித்து அவர் கூறுகையில், 'பை பை பை கலாய்ச்சி பை' பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் இந்தப் பாடலின் மூலம் நான் பிரபலமாகிவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது டமால் டுமீல், ரெண்டாவது படம்,நாலு பொலிசும் நல்லா இருந்த ஊரும், முறியடி போன்ற படங்களில் நடிக்கிறார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment