அனிருத் இசையில் தேவா

No comments

அனிருத் இசையில் பாடியுள்ளாராம் இன்னிசைத் தென்றல் தேவா.
திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படம் 'மான் கராத்தே'.

இப்படத்திற்காக ஒரு கானா பாடலை உருவாக்கியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்.

இந்தப் பாடலை பாட, வித்தியாசமான குரலைத் தேடிய அனிருத்துக்கு உடனே நினைவுக்கு வந்தவர் இசையமைப்பாளர் தேவா.

அவரைத் தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவித்தபோது உடனே சம்மதித்து பாடி கொடுத்துள்ளாராம்.

படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெறும் இப்பாடல் இந்த வருஷத்தின் சூப்பர்ஹிட் பாடலாக அமையும் என்று கூறியுள்ளார் அனிருத்.

No comments :

Post a Comment