இன்ப அதிர்ச்சியில் காஜல் அகர்வால்

No comments
ரசிகர் ஒருவர் அனுப்பிய கடிதத்தால் குஷியில் இருக்கிறாராம் காஜல் அகர்வால்.‘ஜில்லா’வில் காஜல் அகர்வாலின் நடிப்பை பார்த்த சுவிட்சர்லாந்து ரசிகரான வினோ என்பவர் காஜலுக்கு ஈமெயிலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் காஜல் நடித்த படங்களில் அவரது நடிப்பையும், அவர் எவ்வாறு ரசிகர்களை தனது நடிப்பால் மகிழ்விக்கிறார் என்றும் மிகவும் ஆழமாக எழுதியிருந்ததோடு, பென்சிலால் வரையப்பட்ட காஜல் அகர்வாலின் விதவிதமான ஓவியங்களையும் அத்துடன் இணைத்து அனுப்பியிருந்தார்.


இதையெல்லாம் விட காஜலை ஆச்சர்யப்படுத்தியது அந்த ரசிகர் வைத்த வேண்டுகோள் ஒன்று தான். 2009ல் பாலிவுட்டில் வெளியான ‘வாட்ஸ் யுவர் ராசி?” என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் காஜல் நடிக்கவேண்டுமாம்.

அந்தப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா சோப்ரா 12 கெட்டப்புகளில் நடித்திருப்பார். திருமணம் செய்ய நினைக்கும் ஒருவன் ஒரு ராசிக்கு ஒரு பெண் வீதம் பார்த்து அதில் ஒருவரை திருமணம் செய்ய நினைக்கிறான். அந்த 12 கேரக்டர்களிலும் பிரியங்கா தான் நடித்திருந்தார்.

இப்படி ஒரு சவாலான வேடத்தில் நடிக்கும் அளவுக்கு தன்னை உயரமான இடத்தில் வைத்து பார்க்கும் பாஸிட்டிவான கருத்துக்களுடன் வந்த அந்த ரசிகரின் கடிதம் காஜலை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளது.

No comments :

Post a Comment