கடும்குளிரில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்

No comments
கடும்குளிரில் லுங்கி டான்ஸ் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாராம் ஹன்சிகா.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்கும் ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு சாண்டிகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்தது.

வட இந்தியாவில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் படப்பிடிப்பு தளத்திற்கு மிகவும் சிரமப்பட்டு சென்றுள்ளனர் படப்பிடிப்பு குழுவினர்.

இருந்தாலும் அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்குள்ள கோதுமை வயல்களில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆடிப்பாடும் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.

அந்த கடும் குளிரில் ஹன்சிகா லுங்கி – சட்டை காஸ்ட்யூமில் தோன்றி நடனமாடியது அனவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதாம்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் இப்படத்தை திருக்குமரன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.

No comments :

Post a Comment