இளைஞர்கள், நாவலை படமாக்க முன் வரவேண்டும்: கமல் வேண்டுகோள்

No comments
பிரபல இளம் எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கி உள்ள படம் குக்கூ. அட்டக்கத்தி தினேஷ், புதுமுகம் மாளவிகாக நடித்திருக்கிறார்கள். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பேசியதாவது: நான் உழைப்பை நம்புகிறவன். அந்த உழைப்பை இந்தப் படத்தில் பார்க்கிறேன். படத்தில் வரும் கேரக்டர்களுக்கு பார்வை இல்லை என்றாலும் நம் பார்வையை அவர்கள் பக்கம் இழுத்து விடுகிறார்கள். சிறந்த நாவல்களை சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று 35 வருடங்களாக ஒரு கூட்டம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறது. 
அந்த கூட்டத்தில் நானும் ஒருவன். இது பெரிய தயாரிப்பாளர்களின் காதில் விழாவிட்டாலும் நல்ல சிந்தனையாளர்களின் காதில் விழுகிறது. அதற்கு அடையாளம்தான் குக்கூ படம். இந்த முயற்சிகள் தொடர வேண்டும். என் ஊரில் என் தம்பிமார்கள் இது போன்ற சினிமாக்களை எடுத்து வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் மத்திய பிரதேசம் சென்றபோது அங்குள்ளவர்கள் உங்கள் ஊரில் நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. நம் சினிமா நல்ல செழுமையான பாதை நோக்கி நடைபோட வேண்டும்
. திறமைகள் இருக்கும்போது அதிர்ஷ்டத்தை நம்பத் தேவையில்லை. ஹாலிவுட்டைத் தொடர்ந்து தென்னக திறமைகள் உலகம் நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கமல் சிறப்புரையாற்றினார். நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி, இயக்குனர்கள் லிங்குசாமி, பாண்டிராஜ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்ளிட்ட திரையுல முன்னணியினர் பலர் விழாவில் பங்கேற்றனர்.

No comments :

Post a Comment