விக்ரம் பிரபு ஜோடியாகிறார் நஸ்ரியா!

No comments
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா தற்போது சிவப்பு என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் சிவப்பு ரிலீசாக இருக்கிறது. அடுத்து அவர் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் மலையாள உஸ்தாக் ஓட்டலை தமிழில் தலப்பாகட்டி என்ற தலைப்பில் ரீமேக் செய்ய இருக்கிறார். இதில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் விக்ரம் பிரபுவும் மறைந்த திலகன் நடித்த கேரக்டரில் ராஜ்கிரணும் நடிப்பது உறுதியானது. மலையாள உஸ்தாக் ஓட்டலில் ஹீரோயினுக்கு பெரிய முக்கியத்தும் இருக்காது.
 இதனாலேயே நடிகைகள் தயக்கம் காட்டினார்கள். இப்போது படத்தின் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் நஸ்ரியாவிடம் தமிழில் ஹிரோயின் கேரக்டர் விரிவு படுத்தப்பட்டு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பாக கூறியதால் நஸ்ரியா நடிக்க சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த கேரக்டரில் மலையாளத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார். 
 பாரம்பரியமிக்க ஒட்டலை நடத்த முடியாமல் திணரும் தாத்தாவின் உணர்வை புரிந்து கொண்டு அமெரிக்காவில் படித்த பேரன் தனது படிப்பறிவை வைத்துக் கொண்டு அந்த ஓட்டலை எப்படி பெரிய இடத்துக்கு கொண்டு வருகிறார் என்கிற கதை.

No comments :

Post a Comment