அஞ்சான் படத்தில் சமந்தாவின் கேரக்டர் பெயர்!

No comments
சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் ஒரே சமயத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார். இதில் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 இந்தப் படத்தில் சமந்தா கேரக்டரின் பெயர் வெளியாகியுள்ளது. அவர், படத்தில் ஜீவா கேரக்டரில் வருகிறாராம். அஞ்சான்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன் கூட பணியாற்றிவர் மறைந்த ஒளிப்பாதிவாளர் ஜீவா. அவரது நினைவாகதான் சமந்தாவுக்கு இந்தப் படத்தில் ஜீவா என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments :

Post a Comment