சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா!
லிங்குசாமி இயக்கும் ”அஞ்சான்” படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஜாலியான ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம் சூர்யா. வெங்கட்பிரபு சொன்ன கதையை கேட்டவுடன் சூர்யாவுக்கு பிடித்துபோக உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம். தற்போது முழு கதையையும் தயார் செய்து சூர்யாவிடம் காட்டி அனுமதியும் வாங்கிவிட்டார் வெங்கட்பிரபு.
இந்த படத்தில் பிரேம்ஜி உள்பட அவரது வாடிக்கையான நடிகர்களும் உண்டு. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ப்ரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். அஞ்சான் முடிந்தவுடன் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க வருகிறார் சூர்யா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்க சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிக்கப் போவதாக கூறப்படுவதால் ப்ரியங்கா யார் உடன் முதலில் நடிப்பார் என்று கோடம்பாக்கத்தில் ஒரே கிசுகிசுவாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment