வா டீல் படத்தில் டைட்டில் லோகோ பார்முலா 3 கார் பந்தயத்தில் வெளியீடு!

No comments
அருண்விஜய் நடிக்கும் “வா டீல்” படத்தின் டைட்டில் லோகோ பார்முலா 3 கார் ரேசில் வெளியிடப்பட்டது. அருண்விஜய் - கார்த்திகா இணைந்து நடித்து வரும் படம் படம் வா டீல். இப்படத்தினை அறிமுக இயக்குனர் சிவ ஞானம் இயக்குகிறார். முதலில் படத்திற்கு டீல் என்று பெயர் வைத்தவர்கள் பிறகு என்ன காரணமோ தெரியவில்லை திடீரென ’வா டீல்’ என பெயரை மாற்றினர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் படத்தின் டைட்டில் லோகோவை மிகவும் வித்தியாசமான முறையில் வெளியிட்டு அசத்தியுள்ளனர். சென்னையை அடுத்த இருக்காட்டுங்கோட்டையில் நேற்று பார்முலா 3 கார் பந்தயம் நடைபெற்றது. 
இங்கு வைத்துதான் வா டீல் படத்தின் டைட்டில் லோகோவை வெளியிட்டிருக்கிறார்கள். காரணம், படத்தின் கதையில் கார், பைக் ரேஸ் போன்ற காட்சியமைப்புகள் இருப்பதால், பைக் ரேஸ் போட்டியின்போது லோகோவை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்பதற்காக இங்கே வெளியிட்டுள்ளார்களாம். அதன்படி, இந்தியாவில் வளர்ந்து வரும் கார் பந்தய வீரரான மிஹிர் தர்க்கார் ஒட்டிய கார் நம்பர் 9-இல் வா-டீல் படத்தின் லோகோ பொருத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹீரோ அருண்விஜய், இயக்குனர் சிவஞானம், கேமராமேன் கோபி ஜெகதீஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் M.ஹேமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.ஜெயப்பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், சதீஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். அருண் விஜய் - மகிழ்திருமேனி கூட்டணியில் வெளியான தடையறத்தாக்க திரைப்படத்தின் வில்லனான வம்சி இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டப்பிங் வேலைகள் துவங்கவுள்ளன. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments :

Post a Comment