பிரசாந்த்தின் 'சாஹசம்' படப்பிடிப்பு துவங்கியது!

No comments
ஒரு காலத்தில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பல பிரச்னைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இப்போது எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு நடிக்க வந்துவிட்டார். ஸ்டார் மூவிஸ் சார்பில், அப்பா தியாகராஜன் தயாரிப்பில், மேஜர் ரவியின் உதவியாளர் அருண் ராஜ் வர்மா இயக்கும் 'சாஹசம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 பிரசாந்துடன் நாசர், துளசி, தம்பி ராமையா, சோனுசூத், கோட்டா சீனிவாசராவ் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. முன்னணி ஹீரோயின் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நன்றாக படித்த ஒரு இளைஞன் வேலை தேடி அலைவதும் அதனால் அவன் அவமானத்தையும் துயரத்தையும் சந்திப்பதும், அந்த கோபத்தில் தானே சொந்தமாக தொழில் தொடங்கி தனக்கு வேலை தர மறுத்தவர்களையே தனது வேலைக்காரராக்குகிற சாகஹசம்தான் படத்தோட கதை. 
 முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் துவங்கியுள்ளது. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து போன்ற நாடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். 
சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்துக்காக பிரசாந்த் 20 கிலோ எடை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment