பரபரப்பாக படப்பிடிப்புக்கு தயாரான விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!

No comments
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசுகளின் வருகை அதிகமாகவே இருக்கிறது. பிரபு மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கெளதம் ஆகியோர்களை தொடர்ந்து அடுத்து வந்திருப்பவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். தன் மகனுக்காக 120-க்கும் மேற்பட்ட கதைகளை கேட்ட கேப்டன் குடும்பத்தினர், இயக்குனர் நவீன் கதையை ஓகே பண்ணியுள்ளனர். 
சகாப்தம் என படதிற்கு பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படபூஜை, கேப்டனின் இல்லத்திலேயே வெகுவிமரிசையாக நடந்தது. மேலும் சண்முக பாண்டியனை அன்று படபூஜையில் ஏராளமான திரையுலகினரும் பங்கேற்று வாழ்த்தினர்.
 இப்படத்தின் கதை ஒரு புதுமுகத்துக்கான, குடும்பம் , காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளதாம். வல்லரசு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய, சந்தோஷ் குமார் இந்த படம் மூலம் இயக்குனர் ஆகிறார். 
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில் இன்னும் ஹீரோயின் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. காரைக்குடியில் 50 நாட்கள், மலேசியாவில் 50 நாட்கள் என படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 
தற்போது பார்லிமென்ட் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் வேலையில் இதுதொடர்பாக பிசியாக இருக்கும் கேப்டன், நேரம் கிடைக்கும்போது தன் மகன்பட டிஸ்கசனிலும் அடிக்கடி கலந்து கொண்டு ஆலோசனை தருகிறாராம். 
படத்தின் கிளைமாக்ஸ் பக்காவாக பேசப்படுமாம். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதற்காகவே 85 கிலோவாக இருந்த தனது எடையை 65 கிலோவாக குறைத்து, 6.4 அடியில் அனைவரையும் வியப்பாக அண்ணாந்து பார்க்க வைக்கிறாராம் சண்முகபாண்டியன். கேப்டனின் வாரிசாச்சே சும்மாவா...!!

No comments :

Post a Comment