கவர்ச்சி முகத்தை காட்ட வரும் ஸ்ரீதிவ்யா!

No comments
விதார்த் நடித்து வந்த காட்டுமல்லி என்ற படத்துக்காக ஆந்திராவிலிருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்தான் ஸ்ரீதிவ்யா. ஆனால் அந்த படம் விதார்த்தின் மார்க்கெட்டின் மந்தநிலை காரணமாக கிடப்பில் கிடக்கிறது. அதற்கடுத்து ஸ்ரீதிவ்யா கமிட்டான படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அப்படம் வெளியாகி வெற்றி பெற்றதால், அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டார் அவர். 
 அதோடு, விஷ்ணு நடிக்கும் வீர தீர சூரன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் பென்சில் மற்றும் நகர்புறம் படங்களில் கமிட்டானார். ஆனால், அந்த படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் அனைவருமே மார்க்கெட் இல்லாதவர்கள் என்பதால், ஸ்ரீதிவ்யாவும் மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 
அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்காக யாருமே அவரை தொடர்புகொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, இனிமேல் வளர்ந்து வரும் ஹீரோக்கள், மந்தமான ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். 
 இந்த நிலையில், அவர் நடித்து வரும் இன்னொரு படம்தான் அதர்வாவின் ஈட்டி. இந்த படத்தின் மூலம் தனது கவர்ச்சி முகத்தையும் காட்டி மார்க்கெட்டில் பரபரப்பான இடத்தை எட்டிப்பிடித்து விட ேவ்ணடும் என்று வரிந்து கட்டி நிற்கிறார் ஸ்ரீதிவ்யா. அதனால், பாடல் காட்சிகளில் கட்டவிழ்ந்து நிற்பவர், இதற்கடுத்தபடியாக தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் இடம்பிடித்து விட தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.
 இதே படத்திற்காக அமலாபாலும் பரிந்துரைக்கப்பட்டபோதிலும், அவர் எக்குத்தப்பாக சம்பளம் கேட்பதால், தனுஷ்தரப்பு ஸ்ரீதிவ்யா பக்கம்தான் சாய்ந்திருக்கிறதாம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சம்பளத்தைப்பற்றி வாயே திறக்காமல் அப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று தீவிர பேச்சுவார்தையை முடுக்கி விட்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இந்த சேதியறிந்து, ஸ்ரீதிவ்யா மீது கொலவெறியில் இருக்கிறாராம் அமலாபால்.

No comments :

Post a Comment