காயத்ரியை பீல் பண்ண வைத்த மலையாள டைரக்டர்!
தமிழ், தெலுங்கில் நடித்துக்கொண்டிருந்த சில நடிகைகளின் மார்க்கெட் சரியும்போது, மலையாள சினிமாவைத்தான் எட்டிப்பார்ப்பார்கள். அங்கு குறைவான சம்பளமே என்றாலும், ஏதோ சினிமாவில் இருக்கிறோம் என்ற மனநிலையுடன் நடித்து வருவார்கள். அப்படித்தான் இப்போது மீனா, நதியா, ஆண்ட்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் மலையாள சினிமாவை தஞ்சமடைந்துள்ளனர்.
இதைப்பார்த்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி படங்களில் நடித்துள்ள காயத்ரியும் மலையாளத்தில் நடிக்க முயற்சி எடுத்தார்.
ஆனால், தமிழில் பிரபலமாக இல்லாததால் அவருக்கு எந்த மலையாள டைரக்டர்களும் சான்ஸ் கொடுக்க முன்வரவில்லையாம். அதனால் பலமுறை முயற்சி எடுத்து தோல்வி முகத்துடன் திரும்பிக்கொண்டிருந்தார் காயத்ரி.
இந்த நிலையில், தான் தமிழில் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை மலையாளத்தில் மெடுலா ஒப்ளாம் கட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது என்றதும், இந்தமுறை தான் ரிஜக்ட் ஆகமாட்டோம் என்று அப்படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கிய சுரேஷ் நாயரை சந்தித்து சான்ஸ் கேட்டாராம் காயத்ரி. ஆனால் அவரோ, மலையாள சினிமாவுக்கு உங்கள் முகம் பெரிதாக ஒர்க்அவுட் ஆகாது. அதனால் இங்குள்ள சைஜூ என்ற பரிட்சயமான நடிகையை வைத்துதான் நீங்கள் நடித்த அந்த காட்சியை படமாக்கப்போகிறேன் என்று சொல்லி விட்டாராம்.
அதனால், இந்த முறையும் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டாராம் காயத்ரி.
ஆனால் அவர் சான்ஸ் இல்லை என்று சொன்னதுகூட காயத்ரியை பெரியதாக பாதிக்கவில்லையாம. மலையாளத்துக்கு உங்கள் முகம் ஒர்க்அவுட்டாகாது என்று சொன்னதுதான் அவர் மனதை ரொம்பவே பாதித்து விட்டதாம். அதனால், தனது நெருக்கமான தோழிகளிடம் சொல்லி பீல் பண்ணிக்கொண்டு திரிகிறார் காயத்ரி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment