விஜய்யின் அதிரடி அவதாரம்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய், இதுவரை தான் நடிக்காத புதிய பாணிக்கு மாற்றியிருக்கிறார்.
சமீப காலங்களாக முன்னணி நாயகர்கள் சிலர் கெட்டப் சேஞ்ச் என்று உடலை வருத்திக் கொள்வது அல்லது ஹேர் ஸ்டைல் மாற்றிக் கொண்டு தன்னை வித்தியாசப்படுத்திக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், மங்காத்தா தொடங்கி வீரம் வரைக்கும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்து அசத்தியிருந்தார் தல அஜித்.
இதையடுத்து கௌதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில், தனக்கு சீரியல் கில்லர் கதாபாத்திரம் என்பதால் தனது தோற்றத்தையும், இதுவரை இல்லாத அளவிற்கு தனது ஹேர் ஸ்டைலையும் அதிரடியாக மாற்றி வருகிறார்
அஜித்.
இவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் விஜய்யும் தனது ஹேர் ஸ்டைலை இதுவரை தான் நடிக்காத புதிய பாணிக்கு மாற்றியிருக்கிறார்.
அப்படத்தில் இரண்டு வேடம் என்பதால் அழகிய தமிழ் மகனைப் போன்று சாதாரணமாக இல்லாமல், தன்னை முற்றிலுமாக வேறுபடுத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக உடற்கட்டு மட்டுமின்றி, ஹேர் ஸ்டைலை அதிக வித்தியாசப் படுத்திக் காட்டுகிறாராம்.
முன்னதாக, பாலிவுட்டில் இருந்து ஒரு ஹேர் டிரஸ்ஸரை வரவைத்து அவர் கொடுத்த சில கருத்துக்களைக் கொண்டு விஜய்யை பக்காவாக மாற்றியிருக்கிறார் முருகதாஸ்.
தற்போது முதல் கெட்டப்பில் நடித்து வரும் விஜய், அடுத்து இன்னொரு கெட்டப்பிற்காகவும் வேறொரு பாணியில் ஹேர் ஸ்டைலை மாற்றி நடிக்கிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment