விஷாலின் படம் ரிலீசுக்கு ரெடி!

No comments
ஒரு வழியாக விஷாலின் மதகஜராஜா படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. சுந்தர்.சி. இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சோனு சூட் முதலானோர் நடித்துள்ள படம் ‘மதகஜராஜா’. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பலமுறை ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு, ஒரு சில பிரச்சனைகளால் படம் ரிலீசாகவில்லை. இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்த படக்குழுவினருக்கு இப்போது ‘மதகஜராஜா’வை ரிலீஸ் செய்யும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தை அடுத்த மாதம் மார்ச் 7ம் திகதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.
 இந்தப் படத்திற்கு விஜய் ஆன்டனி இசை அமைத்திருக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் முதல் படம் இது.

No comments :

Post a Comment