த்ரிஷ்யம் ரீமேக்கில் இணையும் மீனா- நதியா
த்ரிஷ்யம் படத்தின் மூலம் மீண்டும் மீனாவும், நதியாவும் இணையவிருக்கிறார்கள்.
நடிகர் பிரபுவின் 100வது படமான ‘ராஜகுமாரனி’ல் இணைந்து நடித்தவர்கள் மீனா மற்றும் நதியா.
மலையாளத்தின் வரலாற்று வெற்றிப்படம் என்ற பெருமையோடு இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கிறார்.
மலையாளத்தில் ஜார்ஜ் குட்டியின் மனைவியாக நடித்த மீனாவே, தெலுங்கில் வெங்கடேஷுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தில் பெரிதும் பேசப்பட்ட பெண் பொலிஸ் வேடத்தில் நதியா நடிக்கிறார்.
தமிழில் கதாநாயகிகளாக ஒரு காலத்தில் இணைந்து கலக்கிய இந்த ஜோடி தற்போது தெலுங்கில் கூட்டணி அமைத்து அடுத்து வெற்றிக்காக களமிறங்கி இருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment