பஞ்சரான பத்மினி கார்!

No comments
ரம்மியின் தோல்விக்கு தனது பெயரை முன்வைப்பதால் கடுப்பில் இருக்கிறார் சேதுபதி நடிகர். காரணம், அவர்தான் ஹீரோ என்று நம்பி படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய வியாபாரிகளோ, உங்கள் படம் எங்கள் கையை பெருசாக சுட்டு விட்டது என்று நடிகரிடம் மருந்து கேட்கிறார்களாம். இது ஒருபுறம் இருக்க, முதல் பிரதி அடிப்படையில் ஒரு தயாரிப்பாளரிடம் பணம் பெற்று சங்கு படத்தை தயாரித்து நடித்து வந்த நடிகர், ஒரு கட்டத்தில் பணம் கைக்கு வராததால் படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்.
 ஆனால், இப்போது அந்த படத்துக்காக செலவு செய்யப்பட்ட பணத்தை தனக்கு திருப்பித்தர வேண்டும் என்று அந்த படாதிபதி, சேதுபதிக்கு குடைச்சல் கொடுக்கிறாராம். இதனால் ரம்மி ஒரு பக்கம், சங்கு மறுபக்கம் என இரண்டு படங்களும் கொடுத்த அடி காரணமாக, உற்சாகமாக பயணித்துக்கொண்டிருந்த பத்மினி கார் தற்போது பஞ்சராகிக் கிடக்கிறது.

No comments :

Post a Comment