ஸ்ருதியின் கடும் எதிர்ப்பை மீறி வெளிவந்தது டி டே!

No comments
ஸ்ருதி ஹாசன் நடித்த இந்திப் படமான டி டே இன்று (பிப்ரவரி 14) தமிழ் நாட்டில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளி கேரக்டரில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் வெளியானால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்ற கருதிய அவர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சட்டப்படி படத்தை தடுத்து நிறுத்துவதாக அறிக்கை வெளியிட்டார். "ஸ்ருதி ஹாசன் படத்தில் நடித்தார்.
 அதற்கான சம்பளத்தை பெற்றுக் கொண்டார். அதை தாண்டி படத்தின் மீது எந்த உரிமையும் அவருக்கு இல்லை" என்று தயாரிப்பு தரப்பு கூறியது. அதன் பிறகு ஸ்ருதி எந்த கருத்தும் வெளியிடவில்லை. படம் இன்று வெளியானது. தமிழ் டப்பிங்கிற்கு முதலில் தாவூத் என்று தலைப்பு வைத்திருந்தார்கள். அதனால் எதும் பிரச்சினை வரக்கூடாது என்பதால் டி டே என்ற பெயரிலேயே வெளியிட்டுவிட்டார்கள். நிறைய படங்கள் இன்று வெளியாகி இருப்பதால் போதிய தியேட்டர் கிடைக்காமல் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் படம் திரையிடப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment