அஜீத்தை எச்சரித்த மருத்துவர்கள்!

No comments
பைக் ரேஸ் வீரரான அஜீத், பலமுறை விபத்துக்களை சந்தித்தவர். அதனால் சினிமாவில் ஏற்படும் விபத்துக்களை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. குறிப்பாக, சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். ஆனபோதும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உடனடியாக படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஆரம்பம் படத்தில் நடித்தபோது விபத்தில் சிக்கிய அஜீத்தை உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

 ஆனால், அதற்கடுத்து உடனடியாக வீரம் படத்தில் நடிக்க வேண்டியிருந்ததால் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்த அஜீத். அதைத் தொடர்ந்து இப்போது கெளதம் மேனன் இயக்கும் படத்திலும் நடிப்பதற்கு தயாராகி விட்டார். ஆனால், இந்த படத்திற்காக உடல்கட்டை மாற்றி வரும் அஜீத், ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிக்க வேண்டியிருப்பதால், அவரை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் எச்சரித்து உள்ளார்களாம். அதனால். கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்று யோசித்து வருகிறாராம் அஜீத்

No comments :

Post a Comment