ஆண்ட்ரியாவின் புது அவதாரம் இசையமைப்பாளரானார்!
அவ்வப்போது, சர்ச்சையில் சிக்கினாலும், விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்து, தன் நடிப்பு முத்திரையை அழுத்தமாக பதித்து வருகிறார், ஆண்ட்ரியா. ஆனாலும், அவருக்கு, நடிக்க வரும் வாய்ப்பை விட, பின்னணி பாடல் பாடுவதற்கு தான், அதிக வாய்ப்புகள் வருகின்றன. ஆண்ட்ரியாவின் ஹஸ்கி வாய்சுக்கு,ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
அடுத்த கட்டமாக, தற்போது, தான் நாயகியாக நடித்துள்ள, தரமணி படத்தில், ஒரு ஆங்கில பாடலை எழுதி, இசையமைத்து,பாடி,தானே நடித்தும் உள்ளார். ஆண்ட்ரியா கம்போஸ் செய்து, மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்த சில டியூன்களை கேட்ட டைரக்டர், அதில், ஒரு பாடலை, படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்துகிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment