ஹன்சிகா உறவில் நயன்தாரா குறுக்கிடவில்லை: சிம்பு சொல்கிறார்

No comments
சிம்புவும்ஹன்சிகாவும் காதலிக்கிறார்களா? இல்லையா என்பது பெரும் ஆராய்சிக்கு உட்பட்ட விஷயம். இரண்டு பேருமே ஆமா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்கப்போறோம் என்று சொல்லவே மறுக்கிறார்கள். நல்ல நட்புல இருக்கோம்... நல்ல நட்புல இருக்கோம் கெடுத்துடாதீங்க என்றுதான் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். மீண்டும் சிம்பு அதையேதான் சொல்லியிருக்கிறார். காதலர் தினத்தையட்டி அவர் அளித்த பேட்டி ஒன்றில் இப்படி கூறியிருக்கிறார்..

. "இப்போதைக்கு எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. ஒண்ணா இருக்கோம் அவ்ளோதான். நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். யாருக்குத் தெரியும், வேட்டை மன்னன்ல நடிச்சப்போ பேச ஆரம்பிச்சோம், இப்ப வரைக்கும் பேசிக்கிட்டிருக்கோம். இந்த பயணம் எதுவரை என்று எங்களுக்குத் தெரியவில்லை. நான் எப்போதுமே என்னுடைய உறவுகளை மறைத்தது இல்லை. என்ன பிரச்னை என்றாலும் தாராளமாக வெளியில் சொல்வேன். எங்க காதல் ஹன்சிகா அம்மாவுக்கு பிடிக்கலைங்றது பொய். அப்படி இருந்தால் நான் ஹன்சிகாவை அடிக்கடி சந்திக்க முடியுமா? நயன்தாரா என்னோட நடிக்கிறது டைரக்டர் பாண்டிராஜ் எடுத்த முடிவு.
 ஹன்சிகா மற்ற ஹீரோக்களுடன் நடிப்பதை நான் எப்படி தப்புன்னு சொல்ல முடியாதோ. அதே மாதிரிதான் நயன்தாரா என்னோட நடிக்கிறதையும் ஹன்சிகாக எடுத்துக்குவாங்க. நானும் நயன்தாராவும் சேர்ந்து நடிக்கிறதை சகிக்க முடிவாதவங்கதான் கற்பனையான விஷயங்களை பரப்பிக்கிட்டிருக்காங்க ஹன்சிகாவுக்கும் எனக்குமான காதலில் நயன்தாராவுக்கு எந்த ரோலும் இல்லை" இவ்வாறு சிம்பு கூறியிருக்கிறார்.

No comments :

Post a Comment