ஹைதராபாத்தில் சண்டையிடும் சிம்பு

No comments
வாலு படத்தை உடனடியாக வெளியிடுவது என்ற திடீர் பரபரப்புடன் இயங்குகிறார் சிம்பு. தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வேட்டைமன்னன் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கையில் வாலு படத்தை தொடங்கினார் சிம்பு. வேட்டைமன்னனை தயாரித்த சக்ரவர்த்தியே வாலுவின் தயாரிப்பாளர். அப்போதே அபஸ்வரம் தட்டியது. 
வேட்டைமன்னன் இருக்கையில் எதற்கு இன்னொரு எக்ஸ்ட்ரா வால்? வேட்டைமன்னன் வெளிவரப்போவதில்லை என்பதுதான் இன்றைய நிலவரம். படம் ட்ராப் என்கிறார்கள். 
வாலு படத்தில் சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். ரயில்வே காலனி பின்னணியில் நடக்கும் காதல் கதையிது. காமெடிக்கு சந்தானம். படத்தின் ஆக்சன் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்படுகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன். 
விரைவில் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். காதலர் தினத்தில் பாடல்களை வெளியிடுவதாகக் கூறி கடைசியில் ஆடியோ வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. விஜய் சந்தர் படத்தை இயக்கி வருகிறார்.

No comments :

Post a Comment