ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டது - இனி நானும் தனி ஆள் - சிம்பு அறிவிப்பு!!

No comments
ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டது, இனி அவருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது, நானும் இனி தனி ஆள் தான் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. வல்லவன் படத்தில் நயன்தாராவுடன் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்தனர். ஹன்சிகாவுடன் காதல் நயன்தாராவுடானான காதல் முறிவுக்கு பின்னர் சிங்கிளாக இருந்தார் சிம்பு. 
இந்தநேரம் பார்த்து வாலு, வேட்டை மன்னன் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தனர் சிம்புவும்-ஹன்சிகாவும். இந்தப்படங்களில் நடிக்கும்போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்து வந்தனர் இருவரும். ஒருகட்டத்தில் தாங்கள் இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர். 
அதிலும் ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கிறேன், ஐந்து வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். சிம்புவோ, நாங்கள் அஜீத்-ஷாலினி போன்று வாழ்வோம் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். 

ஹன்சிகா அம்மா எதிர்ப்பு 

 ஹன்சிகா, சிம்புவை காதலிப்பது அவரது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காதலால் உனது சினிமா கேரியர் பாலாகிவிடும் என்று எச்சரித்தார். ஆனால் ஹன்சிகா தன் காதலில் உறுதியாக இருந்தார். இந்தநிலையில் சிம்பு-ஹன்சிகா காதலில் விரிசல் ஏற்பட்டதாக பலமுறை செய்திகள் வந்தது. ஆனால் அதனை இருவருமே மறுத்தனர். தனியாக இருக்கிறேன் - ஹன்சிகா இந்தநிலையில் சமீபத்தில் முடிந்த காதலர் தினத்தன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் நான், 

தனியாகத்தான் இருக்கிறேன் 

என்று சிம்புவுடனான காதல் முறிவை சூசகமாக தெரிவித்து இருந்தார் ஹன்சிகா. அதேசமயம் சிம்புவோ, ஹன்சிகா எனது டார்லிங் என்று கூறிக் கொண்டே இருந்தார். காதல் முறிந்தது - நானும் தனி ஆள் தான் - சிம்பு தனது தங்கை இலக்கியாவின் திருமணத்தில் பிஸியாக இருந்ததால், ஹன்சிகா தனியாக இருக்கிறேன் என்று டுவிட்டரில் கூறியதற்கு பதில் கூறாமல் இருந்து வந்த சிம்பு, இப்போது தானும், தனியாகத்தான் இருக்கிறேன், ஹன்சிகாவுடான காதல் முறிந்துவிட்டது என்று கூறியுள்ளார். 
 இதுகுறித்து தனது செய்தியாளர் மூலம் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது, ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். 
இனி அவருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. இனி அவர் யாரோ, நான் யாரோ, இப்போதிலிருந்து 

நானும் தனியாகத்தான் இருக்கிறேன். 

நன்றாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஹன்சிகாவுடானான காதல் முறிவால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது, சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். தற்போது இதை விவாதிக்கும் மனநிலையில் நான் இல்லை. என் நண்பர்கள், ரசிகர்கர் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கு எனது நிலையை தெரிவிக்கவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். இனி நான் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 நயன்தாராவால் காதல் முறிவா...? சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு பற்றி சிம்புவின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல் இது... அதாவது தங்கை இலக்கியாவின் திருமணத்திற்கு பிறகு தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற முடிவில் உறுதியாக இருந்தார் சிம்பு. அதன்படி சமீபத்தில் அவரது தங்கை திருமணமும் நன்றாக முடிந்தது. இதனையடுத்து சிம்பு, ஹன்சிகாவை உடனடியாக திருமணம் செய்ய விரும்பியுள்ளார். 
ஆனால் ஹன்சிகாவோ திருமணத்தை இன்னும் இரண்டு-மூன்று ஆண்டுகள் கழித்து தான் செய்யணும் என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 அதுமட்டுமின்றி சிம்பு, தற்போது பாண்டிராஜ் இயக்கும் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். அதில் அவர்களுக்குள் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாலும், அது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments :

Post a Comment