டோட்டா ராய் செளத்ரிக்கு என் படத்தின் கதையே தெரியாது! - சொல்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்
துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் தொடங்கி சென்னை, ராஜமுந்திரி என்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் விஜய், வங்காள மொழி வில்லன் நடிகர் டோட்டா ராய் செளத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது விஜய்-சமந்தா சம்பநதப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியபோது அப்படம் பற்றி மீடியாக்களில் பேட்டி கொடுத்த டோட்டா ராய் செளத்ரி அதில் தனது வில்லன் கதாபாத்திரம் பற்றி சொன்னவர், விஜய் இரண்டு வேடம் என்பதையும், தன்னை ஜெயிலுக்குள் தள்ளும் அவரை பழிவாங்க தான் விஸ்வரூபம் எடுப்பது போன்றும் படத்தின் சில முக்கியத்துவம் வாய்ந்த ட்ராக்கை அவுட் பண்ணினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகதாஸ், கதையின் மையத்தை அவர் மீடியாக்களில் உளறி விட்டதால், அவசரகதியில் கதையில் திருத்தம் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இப்போது அதை மறுத்துள்ளார் முருகதாஸ். என் படத்தின் கதையை அத்தனை எளிதில் எல்லோரிடமும் நான் சொல்லி விடுவதில்லை. மேலும், இந்த படத்தைப்பொறுத்தவரை டோட்டா ராய் முக்கிய வில்லன் இல்லை. அவர் ஒரு சிறிய வில்லன்தான்.
அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே விளக்கினேன். மற்றபடி படத்தின் முழுக்கதை அவருக்கு சொல்லவே இல்லை. அதனால், அவர் என் படத்தின் கதையை அவுட் பண்ணி விட்டார் எனவும், அதற்காக நான் கதையில் திருத்தம் செய்து வருவது போலவும் வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று தற்போது மீடியாக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார் முருகதாஸ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment