நயன்தாராவுடன் மோதும் ஜெயம்ரவி!

No comments
பேராண்மைக்குப்பிறகு தனது சாக்லேட் பாய் இமேஜிலிருந்து ஆக்ஷன் இமேஜ்க்கு மாறி வந்த ஜெயம்ரவி, ஆதிபகவன் படத்தில் ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கினார். அதோடு நில்லாமல், அப்படத்தில் நாயகியாக நடித்த நீதுசந்திராவுடனும் ஒரு சண்டை காட்சியில் நடித்திருந்தார். அதையடுத்து, இப்போது தனது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கும் படத்திலும் அப்பட நாயகியான நயன்தாராவுடன் ஒரு சண்டை காட்சியில் நடிக்கிறாராம் ஜெயம்ரவி.
 இப்படத்தில் நயன்தாரா கராத்தே தெரிந்த போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் அவர்களது சண்டை காட்சியை அதிரடியாக படமாக்குகிறாராம் ஜெயம்ராஜா. ஏற்கனவே, பில்லாவில் ஆக்ஷன் பக்கம் மெல்லமாக திரும்பிய நயன்தாரா, ஈ படத்தில் ஜீவாவுடன் மோதினார். 
அதையடுத்து ஆரம்பம் படத்திலும் ஒரு சண்டை காட்சியில் நடித்தவர், கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்திலும் ஆக்ஷன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். 
ஆக பல படங்களில் ஆக்ஷன் வேடங்களில் நடித்து பக்காவாக தன்னை தயார்படுத்தி விட்ட நயன்தாரா, ஜெயம்ரவியுடன் மோதும் சண்டை காட்சியில் இதற்கு முந்தைய பைட் சீன்களை விட பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கூடுதல் சிரத்தை எடுத்து பயிற்சி எடுக்கப்போகிறாராம்.

No comments :

Post a Comment