சின்ன ஷகீலாவாக மாறுவாரா அஞ்சலி!
சித்தி பாரதி தேவியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, அதன்பிறகு தமிழ்நாட்டு பக்கம் எட்டியே பார்க்கவில்லை. சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் போடகூட அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால்தான் ஏற்றுக்கொண்டார். அந்த அளவுக்கு சென்னையை தவிர்த்து வருகிறார் அஞ்சலி.
ஆனால், ஆந்திராவுக்கு போன வேகத்தில் சில படங்களில நடித்த அஞ்சலிக்கு இப்போது அங்கு சரியானபடி படமே இல்லையாம். கடைசியாக மசாலா என்றொரு படத்தில் மட்டுமே நடித்தவர் புதிய படங்கள் இல்லாமல், வீடே கதியென்று அடைந்து கிடக்கிறாராம்.
இதனால் ஏற்கனவே பெருத்துப்போன அவரது உடம்பு இன்னும் பெருத்து கிட்டத்தட்ட சின்ன ஷகீலா போன்று உருண்டு திரண்டு உருமாறி விட்டாராம்.
அதனால்தான், தனது சுயசரிதையை எழுதிவிட்டு அதை படமாக்க களமிறங்கியுள்ள கவர்ச்சி பாம் ஷகீலா, தனது வேடத்தில் நடிக்க இப்போதைய நடிகைகளில அஞ்சலிதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அவரை கைகாட்டியுள்ளாராம்.
ஆனால் அஞ்சலியை தொடர்பு கொண்டபோது, ஷகீலா வாழ்க்கை கதையில் நடித்தால் தனது இமேஜ் சுத்தமாக காலியாகி விடுமோ என்று பயந்து கொண்டிருக்கிறாராம்.
அதையடுத்து, கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததே.
அதனால் இந்த படத்தில் நடித்தாலும் விருது கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாறாக, இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்பே இல்லை எனறு சொல்லி அஞ்சலியின் மனசை அசைத்துக்கொண்டிருக்கிறார்களாம். என்றாலும் இன்னும் அசைந்து கொடுக்கவில்லையாம் அஞ்சலி. தொடர்ந்து மெளனவிரதம் கடைபிடித்துக்கொண்டிருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment