மகேந்திரனிடம் கேட்டால் இளையராஜாவிடம் கிடைக்கும்!
''ட்ரிட்டான் கிரியேட்டீவ் பிக்சர்'' பட நிறுவனம் சார்பில் இயக்குநர் மகேந்திரனும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இணையும் புதிய படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை சாலிகிராமம், பிரசாத் ஸ்டுடியோவில், இளையராஜாவின் இசைக்கூடத்தில் நிகழ்ந்தது.
இவ்விழாவில் பத்திரிகையாளர்களிடம் ''முள்ளு மலரும்'' தொடங்கி ''கண்ணுக்கு மையெழுது'' வரை 11 படங்களில் இணைந்து பணிபுரிந்த நாங்கள் இருவரும் சேரும் 12வது படம் இது...
என பெருமை பொங்க ஒருசேர கூறினர் இளையராஜாவும், மகேந்திரனும்! முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இன்னமும் பெயர் சூட்டப்படாத இப்படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் பிரச்னைகளும், அக்குடும்பத்தலைவியின் உளவியல் சம்பந்தமான போராட்டமும் தான் கதைக்களம் என்றும் கூறினர்.
அவர்கள் இருவரிடமும் நிருபர்கள் அடுக்கடுக்கான பல கேள்விகள் கேட்க சளைக்காமல் பதில் கூறினர். அப்பொழுது மகேந்திரன் எனக்கென்று சில பிரின்ஸ்பிள்கள் இருக்கிறது.
அதை காம்ப்பரமைஸ் செய்து கொள்ள மனமில்லாததால் இதுநாள் வரை சில வாய்ப்புகள் வந்தும், படங்கள் இயக்கவில்லை என்றார். அவரிடம் நமது நிருபர், இளையராஜாவுக்கும், உங்களுக்கும் மட்டும் எப்படி ஒத்துப்போகிறது? அவரிடம் உங்களது பிரின்ஸ்பிள்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளப்படுகிறதா? அல்லது இருவருக்கும் ஒரேமாதிரி கொள்கையா? எனக் கேட்க,
இக்கேள்விக்கு மகேந்திரன் பதில் அளிப்பதற்கு முன்பாக அவரிடமிருந்து மைக்கை வாங்கி இளையராஜா, இதுமாதிரி வம்பு கேள்விகள் தானே வேண்டாம் என்பது... என்றபடி, இங்கு என்னிடம் வரும்போது யாருக்கும் பிரின்ஸ்பிள்ளே இருக்காது. எனக்கும் பிரின்ஸ்பிள் கிடையாது... போதுமா.! என்றார்
சிரித்தபடி மகேந்திரனும் அதை ஆமோதித்தார். மகேந்திரனிடம் கேள்வி கேட்டால், இளையராஜாவிடம் இருந்து பதில் கிடைக்கிறது.
முன்னதாக நிருபர்களிடம், இளையராஜாவிடம் பர்ஸ்னல் கேள்விகள் வேண்டாம் என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டது!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment