அதிக படங்களில் நடிக்காதது ஏன்? லேகா வாஷிங்டன் விளக்கம்

No comments
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார் லேகா வாஷிங்டன். அந்த படம் சுமாராக ஓடியும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று கேட்டதற்கு லேகா வாஷிங்டன் அளித்துள்ள விளக்கம்: நான் பணத்துக்காக நடிக்கிறவள் இல்லை சினிமா மீது இருக்கும் பக்தியால் நடிப்பவள். அதனால் வாய்ப்பைத் தேடி போக மாட்டேன். அகமதாபாத் பிலிம் இன்ஸ்டியூட்டுல நான்கு வருஷம் டைரக்ஷன் படிச்சிருக்கேன். அதனால் தெளிவில்லாத கேரக்டர்கள்ல நடிக்க முடியாது. 
எனக்கு ஸ்கிரிப்ட் முக்கியம். ஸ்டோரி முக்கியம். இப்படியெல்லாம் பாலிசி வச்சிருக்கிறதால யாரும் வாய்ப்பு தருவதில்லை. அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை.
 இன்னொன்று என்னுடைய பெயர். நான் பக்கா சென்னை பொண்ணு ஆனால் லேகா வாஷிங்டன்ங்ற பெயரை வச்சிக்கிட்டு என்னை வெளிநாட்டுக்கார பொண்ணுன்னு நினைச்சிக்கிறாங்க. 
வாஷிங்டன்ங்றது என்னோட கொள்ளு தாத்தா பேரு. எங்கப்பா பாட்டுக்கு அதை எனக்கு வச்சிட்டார். இந்த பெயரும்கூட என்னோட இடைவெளிக்கு ஒரு காரணம் என்கிறர் லேகா.

No comments :

Post a Comment