த்ரிஷா பஞ்ச் விடப்போறாங்க

No comments
என்னுடைய வீட்டில் பஞ்சிங் பேக் வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார் த்ரிஷா. 

த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளை தாண்டிவிட்டார். ஆனால் நடிக்க வந்தது போன்றே இன்றும் ஸ்லிம்மாக உள்ளார். இடையே உடல் மெலிந்தாரே தவிர குண்டாகவில்லை. இவர் தனது வீட்டிலேயே ஒரு குட்டி ஜிம் அமைத்துள்ளார். அந்த ஜிம்மில் தான் அவர் தினமும் ஒர்க் அவுட் செய்கிறார். தற்போது அவரது வீட்டில் ஜிம்மில் புதிதாக குத்துச் சண்டை பயிற்சி எடுக்க பயன்படுத்தப்படும் பஞ்சிங் பேக் வைக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து த்ரிஷா தனது டுவிட்டரில், என் வீட்டு ஜிம்மில் புது வரவு. நன்றி அம்மா மற்றும் இ-பே. கிர்ர்ர்ர்ர்ர் வெளிப்படுத்த சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment