விஜய்யின் வில்லன் யார்?
விஜய்க்கு வில்லன் கதாபாத்திரத்தை தேடி வருகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வில்லனாக நடிக்கும் வங்காள நடிகர் டோடா ராய் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகளை எடுப்பதற்காக இங்கே முகாமிட்டிருக்கிறார் முருகதாஸ்.
விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் பெங்காலி நடிகரான இந்த டோடா ராய் சௌத்ரி தான் என்றும் இவர் கதையின் மெயின் லைனை ஒரு சிலரிடம் சொல்லிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின..
ஆனால் இதை மறுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதுபற்றி முருகதாஸ் கூறுகையில், இந்தப்படத்திற்கு பெங்காலியில் சரளமாக பேசத்தெரிந்த நடிகர் வேண்டும் என தேடியபோது கிடைத்தவர்தான் இந்த டோடா ராய். சொல்லப்போனால் படத்தில் இவர் துணை வில்லன் தான்.
இன்னும் பிரதான வில்லன் கதாபத்திரத்தில் நடிப்பவரை நாங்கள் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் டோடா கதையைப்பற்றி சொன்னதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அப்படியே அவர் சொல்லியிருந்தாலும் அது உண்மையான லைன் இல்லை என மறுத்திருக்கிறார் முருகதாஸ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment