பிரகாஷ்ராஜின் சமையல்!
ரசிகர்களுக்கு விரைவில் பரிமாற வருகிறது பிரகாஷ்ராஜின் ‘உன் சமையல் அறையில்’.
ரீமேக் வரிசையில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் பிரகாஷ்ராஜின், உன் சமையல் அறையில்.
தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்கிறார்.
மூன்று மொழியிலும் இப்படத்தின் டாக்கி போர்ஷன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு ஸ்பீடாக நடந்து வருகிறது.
இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோவை மார்ச் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.
படத்தை மூன்று மொழியிலும் ஒரே நேரத்தில், மே மாத வெளியீடாக கொண்டு வர திட்டமிட்டுள்ளார், மேலும் இந்தப் படத்தில் நடிப்பதோடு, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களையும் அவரே ஏற்றுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment