டாப்ஸியின் முடிவு

No comments
நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறாராம் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இந்தியிலும் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. இதையடுத்து மீண்டும் படிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆடுகளம் படத்தில் எனக்கு பாராட்டு கிடைத்தது. 
ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். இதனால் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது. மேலும் நடிப்பு முடிந்ததும் எனது சொந்த வேலையை பார்க்கவே ஆர்வம் காட்டுவேன். இன்ஜினியரிங் படிப்பு முடித்தபிறகு நடிக்க வந்தேன். 
தற்போது மீண்டும் படிப்பு மீது ஆர்வம் கொண்டிருக்கிறேன். எனது மேற்பட்ட படிப்புக்காக மீண்டும் கவனம் செலுத்த உள்ளேன் என்று கூறியுள்ளார்

No comments :

Post a Comment