விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் மனிஷா யாதவ்

No comments
விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் மனிஷா யாதவ்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக சீனுராமசாமி இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகி யார் என்று முடிவாகாமல் இருந்தது. கதாநாயகிக்கான ஆடிஷன் சமீபத்தில் நடந்தது. நிறைய பேர் கலந்துகொண்ட இந்த ஆடிஷனில் நடிகை மனிஷா யாதவின் பெர்ஃபார்மென்ஸ் சீனுராமசாமிக்கு ரொம்பவும் பிடித்துவிட, ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகி இருக்கிறார் மனிஷா யாதவ். 
 வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில நடித்த மனிஷாவுக்கு ‘தேசிய விருது’ பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் அவ்வளோ மகிழ்ச்சி. விஜய்சேதுபதி – மனிஷா முதன் முதலாக ஜோடி சேரும் படம் இது.

No comments :

Post a Comment