விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதியானது!

No comments
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட்டில் பிசியாகி விட்ட அவரை எந்த இயக்குனரும் தமிழுக்கு கொண்டு வரவில்லை. இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்காக மீண்டும் தமிழுக்கு வருகிறார் பிரியங்கா சோப்ரா. 
 முன்னதாக, அந்த படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கு கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனேயைத்தான் கேட்டார்கள். ஆனால் அவரோ, ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற கணக்கில் சம்பளம் கேட்டதால், இவர் கோடம்பாக்கத்துக்கேற்ற கோவக்காய் இல்லை என்று கட் பண்ணி விட்டு, இப்போது பிரியங்கா சோப்ராவை பேசியுள்ளார்களாம். 
 பிரியங்காவும் இப்போது பாலிவுட்டில் அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகைதான் என்றபோதும், கோடம்பாக்கத்தின் பட்ஜெட்டுக்கேற்ப விட்டுக்கொடுத்துள்ளாராம்.
 மறுபடியும் தமிழில் நடிக்கிறோம் என்பது மட்டுமின்றி, தனது முதல் பட நாயகனான விஜய்யுடன் மீண்டும் இணைப்போகிறோம் என்று இரட்டிப்பு சந்தோசமும் இதற்கு காரணமாம். அதனால் காலம் தாழ்த்தாமல், கதையை சொல்லி அட்வான்சையும் கைமாற்றி விட்டார்களாம்.

No comments :

Post a Comment