சிவகார்த்திகேயனும் செண்டிமென்ட் வட்டத்திற்குள் சிக்கினார்!

No comments
ஒரு படம் ஹிட்டடித்து விட்டால் போதும், அதன் பிறகு அந்த படத்தின் கதையை தழுவியே கதை கேட்பார்கள் நடிகர்கள். அதேபோல் அதில் தங்களுடன் பணியாற்றிய நடிகர்-நடிகைகளையும் கூட்டணி சேர்த்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். இதை ஆரம்பத்தில் கடைபிடிக்காத சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து, அதே பாணியில் கொஞ்சம் காதல், நிறைய காமெடி அதற்குள்ளே ஒரு மெசேஜ் என்ற விகிதத்தில் கதைகள் கேட்கிறார்.
 அதனால் காமெடி ஒன்றையே இலக்காக வைத்து தனக்கு கதை பண்ணி முற்றுகையிட்ட அத்தனை டைரக்டர்களிடமும் கரெக்சன் சொல்லி அனுப்பி விட்டார். குறிப்பாக, முன்னணி கதாநாயகி என்பதை விடவும், வெற்றி படங்களில் நடித்த நடிகையாக இருக்க வேண்டும் என்பதையும் கோடிட்டு காட்டுகிறாராம். 
 இதற்கெல்லாம் மேலாக காமெடியன் சூரி கட்டாயம் வேண்டும் என்கிறாராம். ஒரு மாறுதலுக்காக சந்தானத்தை சேர்த்துக்கொள்ளலாமே? என்று யாராவது சொன்னால், காமெடியனை நான்தான் கலாய்க்க வேண்டும். 
அதற்கு சூரி உடன்படுவார். ஆனால், சந்தானம் அவர்தான் கதாநாயகர்களை கலாய்க்க ஆசைப்படுகிறார். அதனால் அவர் நமக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்கிறாராம். இதன்காரணமாக, சிவகார்த்திகேயன் கேட்டு வைத்துள்ள மூன்று கதைகளிலுமே காமெடி ஏரியாவுக்கு சூரிக்குதான் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

No comments :

Post a Comment