அனிருத் கைது இல்லை: போலீஸ் அறிவிப்பு!

No comments
யூ டியூப்பில் பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தி பாடல் வெளியிட்டதாக இசை அமைப்பாளர் அனிருத் மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீது எப்.ஐ.ஆர் போடுமாறு நீதிமன்றம் உத்தவிரவிட்டது. சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையொட்டி அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. 
 இதுவரை அனிருத் கைது செய்யப்படாததால் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் ஏன் கைது செய்யவில்லை என்று போலீசிடம் கேட்டபோது. "இது சாதரண குற்றம்தான். 
அவரும் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர். எனவே கைது நடவடிக்கை அவசியம் இல்லை. மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் தரப்பில் கூறியிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளனர். இதனால் அனிருத் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து விட்டார். 
மேலும் குற்றச்சாட்டு எழுந்த உடனேயே யூ டியூப்பில் இருந்து பாடலை நீக்கி விட்டதால் ஒரு சின்ன எச்சரிக்கையுடன் நீதிமன்றம் அனிருத்தை விடுவித்து விடும் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

No comments :

Post a Comment