நடிகைகளின்பின் ஜாதி கூடாது சரி! சீமானின் பெயருக்கு முன் செந்தமிழன் சரியா.?!
தமிழன் கலைக்கூடம், கா.கலைக்கோட்டுதயம் தயாரிப்பில் பிரபல பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கத்தில், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் உருவாகி இருக்கும் திரைப்படம் ''சினேகாவின் காதலர்கள்''!
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னை, சாலிகிராம் பிரசாத்லேப் திரையரங்கில் நடந்தேறியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சீமான் பேசும்போது, நடிகைகள் தங்கள் பெயருக்கு பின் ஷெட்டி, ரெட்டி, ராய், சர்மா என்று ஜாதியின் பெயரை சேர்த்துக் கொள்வது தவறு... அதை தவிர்க்க வேண்டும் என்றார்.
சிநேகாவின் காதலர்கள், கதாநாயகி கீர்த்தி ஷெட்டியும், சீமானின் பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே நந்திதா எனும் பெயரில் அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு உள்ளிட்ட 6 படங்களில் நடித்திருக்கும் அம்மணி மூன்றாவதாக சீமானின் பேச்சைக்கேட்டு பெயர் மாறினாலும் மாறலாம்!
அது இருக்கட்டும் ஒரு பக்கம், நடிகைகளின் பெயருக்கு பின்னால் ஜாதி ஒட்டிக்கொண்டிருப்பது தவறு..
. எனும் சீமானின் பேச்சைக்கேட்டு பத்திரிகையாளர்களில் விவரமான ஒருவர், நடிகைங்க பெயருக்கு பின் ஜாதி ஒட்டிக்கொண்டிருப்பது இருக்கட்டும், சீமானின் பெயருக்கு முன் செந்தமிழன் என இனம் ஒட்டிக்கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்?
என முணுமுணுத்தது, சீமானின் காதில் விழுந்ததா... பச்சை தெலுங்கன்... செந்தமிழன், வைலட் மலையாளி என்பதெல்லாம் சரியா.?! இந்தியன் என்பதுகூட சரியாகாது! மனிதன் என்பது தானே சரி! என்று கூறினார் அருகில் இருந்த மற்றொரு பத்திரிகையாளர். - அட ஆமால்ல!!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment