வழிகாட்டுகிறது ஒளிப்பதிவாளர் சங்கம்
எங்கள் மொழி படங்களில் வேறு யாரும் பணியாற்றக்கூடாது. எங்க ஏரியா உள்ள வராதே என்கிற பிரச்னை தமிழ் சினிமா சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று. அஜீத், விஜய், சூர்யா படத்தைகூட இந்த பிரச்னை நிறுத்தி விடுகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிற மாதிரி தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம். ஒரு முடிவை எடுத்திருக்கிறது.
எந்த மாநில ஒளிப்பதிவாளரும் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்கிற முடிவு அது.
அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கங்களில் கூட்டு கூட்டம் சென்னையில் பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடந்தது.
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதன் தலைவராக மும்பையை சேர்ந்த அனில் மேத்தாவும், செயலாளராக சன்னி ஜோசப்பும், ஜி.சிவாவும், பொருளாளராக ராபர்ட் ஆசீர்வாதமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒளிப்பதிவாளர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், எல்லா மாநிலத்திலும் எல்லா மொழியிலும் பணியாற்றலாம் என்றும், வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்கள் இந்தியாவில் பணியாற்ற சில கட்டுப்பாடுகளை விதிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்மையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்த கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment