சிம்புவின் ‘வாலு’ எப்போது?

No comments
சிம்புவின் ‘வாலு’ படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். விஜயசந்தர் இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, முக்கிய கேரக்டரில் சந்தானமும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசை அமைக்க, பல வெற்றிப் படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார். 
 இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தறுவாயில் இருக்கிறது. இன்னும் 3 நாட்கள் படப்பிடிப்போடு முடிவுறுகிறதாம். 
 அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை சீக்கிரமாக முடித்து, படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பு தரப்பினர்.

No comments :

Post a Comment