அஜித்தின் நாயகி யார்?

No comments
கௌதம் மேனன் படத்தில் அஜித்தின் நாயகி யார் என்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன. வீரம் படத்தைத் தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜித். மங்காத்தா, ஆரம்பம், வீரம் ஆகிய படங்களில் தனது ‘சால்ட் அன்ட் பெப்பர்’ ஸ்டைலில் வந்து கலக்கிய அஜித், கௌதம் மேனன் இயக்கும் படத்தில ஸ்லிம் கெட்-அப்பில் நடிக்க இருக்கிறார்.
 இதற்காக தினமும் ஜிம், உடற்பயிற்சி என்று தன்னை ஸ்லிம் ஆக்கிக் கொண்டு வருகிறார். முதலில் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்று பேசப்பட்டது. 
ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லையாம். இதனால் அஜித்தின் புதிய கெட்-அப்பிற்கு ஏற்றார்போல வேறு ஒரு நடிகையை தெரிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

No comments :

Post a Comment