பங்களா வீடு கட்டும் அமலாபால்

No comments
சொந்தமாக பங்களா வீடு கட்டி வருகிறாராம் அமலாபால். அமலாபால் தற்போது ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில், தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படங்களில் நடிக்கிறார். இரு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளது. மலையாளத்திலும் படங்கள் குவிகிறது. மோகன் லாலுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார், சம்பளமும் கூடியுள்ளது. இந்நிலையில் கொச்சியில் சொந்தமாக பங்களா வீடு கட்டி வருகிறார். 
கட்டுமான பணிகளை படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நேரில் போய் கவனிக்கிறார். மேலும் வீட்டுக்கு தேவையான மரசாமான்களை சமீபத்தில் சீனாவில் இருந்து வாங்கி வந்துள்ளாராம் மைனா.

No comments :

Post a Comment