விஜய்-முருகதாஸ் படம் சில சுவாரஸ்ய தகவல்கள்…!

No comments
ஜில்லா படத்திற்கு பிறகு முருகதாஸ்-விஜய் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். இப்படத்தில் அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் கதை கசிந்துள்ளது. படத்தில் வில்லன் வேடத்தில் பெங்காலி நடிகர் தோட்டா ராய் சௌத்ரி நடிக்கிறார். இவர் வெளிநாட்டு தாதாவாக வருகிறாராம். கதைப்படி இவரை பிடிக்க கொல்கத்தா போலீஸ் விஜயின் உதவியை நாடுகிறது. விஜயின் உதவியால் வில்லனை பிடித்து ஜெயிலில் தள்ளும் கொல்கத்தா போலீஸ் பின் அவரை தப்பிக்கவிடுகிறது.
 தன்னை பிடித்து கொடுத்த விஜயை போட்டுத்தள்ள வரும் வில்லனுக்கு அப்போதுதான் விஜய் தோற்றத்தில் இன்னொருவரு இருப்பது தெரியவருகிறது. இறுதியில் என்னவாகிறது என்பதை ஆக்‌ஷனுடன் சொல்லப்போகிறார்கள் இப்படத்தில். நாளை முதல் சென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. அதன் பின் ஜெயில் காட்சிகள் ராஜமுந்திரியில் நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் வைக்கவில்லை.

No comments :

Post a Comment