குஷ்பு பேச்சை ரசிப்பதா….? ரொம்ப கேவலங்க

No comments
அரசியலில் அளவுக்கு மீறி வாய்விடும் நடிகர்களின் நிலை என்னவாகும் என்பதற்கு வாழும் உதாரணமாக உலவிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அவரின் நிலையை அருகிலிருந்து கவனித்தும் அறியாமையில் இருக்கிறார்கள் சிலர். சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் குஷ்பு கடுமையாக ஜெயலலிதாவையும், அவர் தலைமையில் இயங்கும் தமிழக அரசையும் விமர்சித்தார். 
அவரின் பேச்சை திமுக தலைவர்கள் ரசித்து கேட்டனர். இந்நிலையில் அவருக்கு தனது பேச்சில் கவுண்டர் கொடுத்தார் நடிகர் சிங்கமுத்து. திமுக வில் எவ்வளவோ திறமையான பேச்சாளர்கள் இருக்கையில் குஷ்புவை பேசவிட்டு அவரின் பேச்சை ரசிப்பது கேவலம் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறினார். 
சிங்கமுத்து தீவிர அம்மா அனுதாபி. வரவிருக்கிற தேர்தலுக்கு அச்சாரமாக இப்போதே சிங்கமுத்துவை அழைத்து பேசவிடுகிறார்கள் அதிமுகவினர்.

No comments :

Post a Comment